படங்களின் வெற்றி தோல்வி குறித்து கவலை இல்லை… பஹத் பாசில் பதில்!

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (08:15 IST)
மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோஜி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

இயக்குனர் திலேஷ் போத்தன் அறிமுகமான முதல் படமான மகேஷிண்ட பிரதிகாரம், மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களுக்கே மிகவும் பிடித்த படமாக அமைந்து திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது. அதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்த தொண்டிமுதலும் திருச்ஷாட்சியும் திரைப்படமும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.

இதையடுத்து இப்போது இருவரும் மீண்டும் இணைந்து ஜோஜி என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படம் ஷேக்ஸ்பியரின் நாடகமான மெக்பத்தின் ஒரு பகுதியை தழுவி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த 7 ஆம் தேதி வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பஹத் ‘என் படங்களின் வெற்றி தோல்வி குறித்து கவலைப்படுவது கிடையாது. வெற்றி பெற்ற படங்களில் கூட இன்னும் செய்வதற்கு நிறைய உள்ளது. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு பிடித்த ஐடியா ஒன்றில் வேலை செய்வது மிகவும் உற்சாகம் தரக்கூடியது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்