லியோ படத்தில் இவரும் இருக்காரா.. சர்ப்ரைஸ் கொடுத்த 90ஸ் வில்லன்!

சனி, 11 மார்ச் 2023 (13:29 IST)
பூவிழி வாசலிலே படத்தில் கடலை கொறித்தபடி, அந்தச் சின்னப் பையனையும், நம்மையும் பயப்பட வைத்த நடிகர் பாபு ஆண்டனிக்கு அறிமுகம் தேவையில்லை. அதுபோல சூரியன் படத்திலும் அவரின் வில்லன் நடிப்பு பேசப்பட்ட ஒன்றாக அமைந்தது. இப்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் இவர், 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் வில்லன் நடிகர்களில் ஒருவர்.

இந்நிலையில் இப்போது இவர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் இணைந்துள்ளார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ள அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்