ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒரு நாள் உண்ணாவிரதமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும். இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள் என்றும் நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் அறிவித்துருந்தார்.