HBD சுமலதா: திரையுலகினர் வாழ்த்து!

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:18 IST)
HBD சுமலதா: திரையுலகினர் வாழ்த்து!
நடிகையும் பாராளுமன்ற எம்பியுமான சுமலதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை நடிகை சுமலதா நடித்துள்ளார். குடும்பம் ஒரு கதம்பம், தீர்ப்பு, அழகிய கண்ணே, ஒரு ஓடை நதியாகிறது உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள சுமலதா 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மாண்டியா என்ற தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார் 
 
கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் சுயச்சை எம்பி வரை இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்