அஜித்தின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாராவா?

திங்கள், 22 பிப்ரவரி 2021 (08:44 IST)
அஜித்தின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாராவா?
அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
அஜித்தின் அடுத்த படத்தை இயக்குபவர் விஷ்ணுவர்தன் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் அஜித்தின் அடுத்தப் படமும் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க இருப்பதாகவும் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் அவர் தொடர்ச்சியாக அஜித்தின் மூன்று படங்களை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட்டே ஒரு வருடமாக வராத நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றும் அஜித் தரப்பில் இருந்து அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்