தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமானவராகவும் ,பொன்னுமணி படத்தில் நடிகர் கார்த்திக்கு வில்லனாகவும் நடித்தவர் தற்போதும் நடித்துக் கொண்டிருப்பவர் பப்லு. இவர் நடிகர் அஜித், ஷாலினி பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், நான் ஒருமுறை ஹோட்டலில் சாப்பிடச் சென்றிருந்தேன். அதே ஹோட்டலுக்கு நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகளுடன் சாப்பிட வந்தார். நான் அவரிடம் பணியாற்றியதில்லை என்பதால் அவரிடம் பேசுவதாக எண்ணி ஒரு ஹாய் சொல்லும்போது அதை அவர் கவனிக்கவில்லை எனில் நன்றாக இருக்காது என அவருடன் பேசாமல் இருந்துவிட்டேன்.
அடுத்த நிமிடமே ஷாலினி அஜித் அவர்கள் எனக்கு போன் செய்து, என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.அத்துடன் அன்று ஹோட்டலில் தான் பேசாதது குறித்து அஜித்திம் கூறியதாகவும், அதற்கு அஜித், ’’பப்லுவின் தங்கை எனது கிளாஸ் மேட் எனவும் அவர் பள்ளியிலும், சினிமாவிலும் எனக்கு சீனியர் என்றும் நீ தான் பேசியிருக்க வேண்டும் என்று என்னிடம் அவர் கோபித்துக் கொண்டதாக கூறினார்.’’