அஜித்துக்கு வில்லனா? சீனியர் நடிகரின் ஆசை!

சனி, 4 ஜூலை 2020 (13:17 IST)
அஜித்திற்கு வில்லனாக நடிக்க விரும்பவில்லை என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் நெப்போலியன். 
 
மகனின் சிகிச்சைக்காக தற்போது அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன், கடைசியாக தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் நடித்தார். தற்போது டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார்.
 
அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் நெப்போலியன் வீடியோ காலில் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் விஜய் பற்றி பேசி இருந்த அவர் தற்போது அஜித் குறித்து பேசியுள்ளார்.
 
அஜித் குறித்து அவர் கூறியதாவது, தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களுடன் நடித்து விட்டேன், அஜித் உடன் தான் இன்னும் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. 
 
ஆனால் அஜித்திற்கு வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன். பாசிட்டிவான கதாபாத்திரம் கொடுத்தால் அவருடன் நடிக்க தயார் என பேட்டியளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்