அஜித்திற்கு வில்லனாகும் கேஜிஎஃப் -2 பட நடிகர்

வியாழன், 28 ஜூலை 2022 (15:31 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக வேகமாக நடந்த ஷூட்டிங்  நடந்து, வந்த நிலையில்,  அஜித் தன் குடும்பத்துடன் ஐரோப்பா சுற்றுப்பயணம் செய்து திரும்பியதும், திருச்சியில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு நடந்து போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

இப்போட்டில் முடிந்த பின்,  நடிகர் அஜித் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில்,  அஜித் 61 படத்தில் கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அஜித்61 பட ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் புனேவில் நடக்கவுள்ள நிலையில், அப்போது, அஜித், சஞ்சய் தத் காட்சிகள்  படமாக்கப்படும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்