அஜித் 61 படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு பட வில்லன் நடிகர்!

திங்கள், 18 ஜூலை 2022 (09:54 IST)
அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டாலும் இதுவரை எந்தவிதமான அப்டேட்டும் ரசிகர்களுக்காக வெளியிடப்படவில்லை.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அஜித் ஐரோப்பாவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் வினோத்.

விரைவில் அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துக் கலக்கி வரும் அஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்