இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், தற்போது கடந்த சில மாதங்களாக மீண்டும் இவர்கள் காதல் மலர்ந்துள்ளதாகவும், தாய்லாந்த், மற்றும் சென்னையில் உள்ள மால்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றிய சில புகைப்படங்கள் வெளியானது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல இயக்குநர்களால் கவனிக்கப்பட்ட ஆரவ், தன்னை தேடி வரும் திரைப்பட வாய்ப்புகளையெல்லாம் ஏற்காமல் சிறந்த கதையை தேர்வு செய்ய காத்திருந்தார்.
இந்நிலையில் ஆரவ் நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குநர் விஜய்ஸ்ரீ என்பவர். இவர் இயக்கும் படத்தில், ஆரவ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ஆரவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.