கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார்.
அந்நிலையில், ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதைக்கண்டு அவரின் ரசிகர்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். வேண்டாம்.. ஆரவ் வேண்டாம்..என கமெண்ட் போட்டனர். அதே நேரத்தில் பலர் ஓவியாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் ஓவியாவும், ஆரவும் நெருக்கமாக கைகோர்த்து ஊர் சுற்றும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும், வழக்கமான சினிமா பிரலங்கள் போல் காதலை சில வருடங்களுக்கு மறைப்பார்கள் என நம்பப்படுகிறது.