அவெஞ்சர்ஸ் படவரிசையில் நான்காவது பாகமான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தியாவில் ஆங்கிலத்திலும் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் தமிழ் வெர்ஷனுக்கு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வசனம் எழுத இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி தெரிவித்துள்ளது. இதுபோல தெலுங்கு, இந்தி மொழிகளில் வசனம் எழுதவும் சில முக்கிய நபர்களிடம் பேச்சுவார்ததை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.