தனுஷுக்கு புதிய பட்டத்தைக் கொடுத்த தெலுங்கு தயாரிப்பாளர்!

வியாழன், 29 ஜூலை 2021 (15:23 IST)
தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷ் ஏற்கனவே தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அவருடைய கால்ஷீட் 2023 ஆம் ஆண்டு வரை நிரம்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். மேலும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் பான் - இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தனுஷ் ஏற்கனவே பல படங்களைக் கையில் வைத்திருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தில் கமிட்டாகக் காரணம் இந்த படத்துக்காக மொத்தமாக தனுஷுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் தனுஷ் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. அதில் தனுஷ் பெயருக்கு முன்னால் இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டு இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்