மறைந்த இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் பெயரில் நூலகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் எழுத்தாளர் அஜயன் பாலா. இந்த நூலகத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராம், “பாலு மகேந்திரா சாரை நான் மிஸ் பண்றேன். என்னுடைய ‘கற்றது தமிழ்’ படத்தை அவரிடம் காண்பித்தபோது, ஆசியாவின் சிறந்த 5 படங்களில் இது ஒன்று என்று பாராட்டினார்.
அதேசமயம், ‘தங்க மீன்கள்’ படத்தைப் பார்த்துவிட்டு ‘மோசம்’ என விமர்சித்தார். ‘தரமணி’ படத்தையும் அவரிடம் காண்பிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது” எனத் தெரிவித்தார்.