தமிழக அரசால் பாதிக்கப்பட்ட 8 படங்கள்

திங்கள், 9 அக்டோபர் 2017 (12:01 IST)
தமிழக அரசின் கேளிக்கை வரியால், ரிலீஸாகியிருக்க வேண்டிய 8 படங்கள் ரிலீஸ் ஆகாமல் தவித்து வருகின்றன.

 
 
நாடு முழுவதும் ஒரே வரி என அறிமுகப்படுத்தி, தியேட்டருக்கு 28 சதவீதம் வரி விதித்தார் மோடி. இந்நிலையில், தமிழக அரசு உள்ளாட்சி கேளிக்கை வரி என 10 சதவீதம் விதித்துள்ளது. இதனால், மொத்தம் 38 சதவீதம் வரியாகவே செலுத்த வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதை எதிர்த்து, புதுப் படங்கள் எதையும் ரிலீஸ் செய்ய மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள்  சங்கமும் முடிவு செய்தன. இதனால், கடந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படங்கள் ரிலீஸாகவில்லை. ‘விழித்திரு’,  ‘உறுதி கொள்’, ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, ‘களத்தூர் கிராமம்’, ‘திட்டிவாசல்’, ‘உப்பு புளி காரம்’ மற்றும் ‘அழகின்  பொம்மி’ ஆகிய படங்கள்தான் அவை.
 
அத்துடன், 5ஆம் தேதியே ரிலீஸ் ஆன துல்கர் சல்மான் நடித்த ‘சோலோ’ படமும், மறுநாள் முதல் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். 4 கேரக்டர்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்