2004 ஆம் 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.
இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த ரவிகிருஷ்ணாவே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என சொல்லப்படுகிறது. கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக இருக்குமா இல்லை புதிய கதைககளமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.