7ஜி ரெயின்போ காலணி இரண்டாம் பாகத்தில் ஒளிப்பதிவாளர் மாற்றம்!

திங்கள், 17 ஜூலை 2023 (08:09 IST)
2004 ஆம் 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் முதல் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவே இரண்டாம் பாகத்துக்கும் ஒளிப்பதிவு செய்வார் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் சேர்ந்து படத்துக்கான லொக்கேஷன்களை தேடும் பணியில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்