ரி ரிலீஸ் ஆகும் 7ஜி ரெயின்போ காலணி திரைப்படம்… அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்!

சனி, 16 செப்டம்பர் 2023 (12:48 IST)
2004 ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இந்த படத்தின் வெற்றியால் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 7ஜி பிருந்தாவன் காலணி என்ற பெயரில் அங்கும் ஹிட் அடித்தது. இந்நிலையில் 19 ஆண்டுகள் கழித்து இந்த படம் தெலுங்கில் மீண்டும் ரி ரிலீஸ் ஆகிறது. இது சம்மந்தமான அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்