விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!

செவ்வாய், 22 ஜூன் 2021 (13:45 IST)
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று அவரின் 47 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரின் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் நிலையில் அஜித் ரசிகர்களும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருநெல்வேலியில் 100 பேருக்கு உணவளித்து விஜய் பிறந்தநாளை அவர்கள் கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்