54 வயது எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணமா? மணப்பெண் நடிகையா?

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:31 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா 54 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் விரைவில் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
வாலி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களை இயக்கிய எஸ்.ஜே சூர்யா ஒரு கட்டத்தில் நடிகராக மாறிவிட்டார் 
இந்த நிலையில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ்ஜே சூர்யா தமிழ் தெலுங்கு மொழிகளில் பிசியாக உள்ளார் 
 
இந்த நிலையில் 54 வயதாகும் எஸ்ஜே சூர்யாவுக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் அவருக்கு பார்க்கப்படும் பெண் கண்டிப்பாக நடிகையாக இருக்க மாட்டார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
 
எஸ்ஜே சூர்யாதிருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்