26 லட்சம் டிக்கெட் விற்பனை; 100 கோடி வசூல்? – முதல் நாளே பட்டையை கிளப்பிய ஜவான்!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (10:11 IST)
ஷாரூக்கான் நடித்து வெளியாகியுள்ள ஜவான் திரைப்படம் முதல் நாள் வசூலிலேயே 100 கோடியை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஷாரூக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இந்த படத்தின் நயந்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

நேற்று படம் வெளியானதிலிருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களாக இருந்து வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி இந்தியாவில் ஜவான் படத்திற்கு முதல் நாள் டிக்கெட்டுகள் மட்டும் மொத்தமாக 26,89,361 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாம்.

ஜவான் படத்தின் நேற்றைய வசூல் மட்டும் இந்தியில் ரூ.60.76 கோடியும், தமிழில் ரூ.6.41 கோடியும், தெலுங்கில் ரூ.5.29 கோடியும் வசூலித்துள்ளதாம். இந்தியாவில் மட்டும் மொத்தம் ரூ.72.46 கோடி வசூல் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் நெருங்கி ஜவான் ரூ.100 கோடி வரை வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ரூ.1000 கோடி வசூலில் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் 1000 கோடி க்ளப்பில் இணைந்த முதல் தமிழ் இயக்குனராக அட்லீ இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்