லியோ படத்தை உங்களோடு பார்க்கணும் சார்… ஷாருக் கானுக்கு கோரிக்கை வைத்த லோகேஷ்!

வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:19 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்திருந்தார். அதை பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார் ஷாருக் கான். மேலும் ஜவான் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் எனவும் கூறியிருந்தார்.

அந்த ட்வீட்டுக்கு பதிலளித்த லோகேஷ் “ஜவான் படத்தை தமிழில்தான் பார்க்க திட்டமிட்டுள்ளோம்.  லியோ ரிலீஸ் ஆனதும், உங்களோடு அந்த படத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறேன். மேலும் லியோ குறித்து உங்கள் கருத்துகளை தெரிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்