2.0 படத்துக்கு கிடைத்த ரூ.200 கோடி: பாதி காசை எடுத்துவிட்டது

வியாழன், 15 ஜூன் 2017 (05:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகாவின் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் '2.0' திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.



 


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சாட்டிலைட் உரிமையை ரூ.110 கோடிக்கு ஜீ தொலைக்காட்சி பெற்றது என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி மொழி ரிலீஸ் உரிமை வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இந்தி ரிலீஸ் உரிமையை AA பிலிம்ஸ் என்ற நிறுவனம் ரூ.80 கோடிக்கு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மற்றும் அக்சயகுமார் ஆகிய இருவருமே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் இந்த நிறுவனம்தான் 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று மிகப்பெரிய லாபம் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்டிலைட் உரிமையில் ரூ.110 கோடியும், இந்தி உரிமையில் ரூ.80 கோடியும் வியாபாரம் ஆகிவிட்டதால் கிட்டத்தட்ட மொத்த பட்ஜெட்டில் பாதிக்காசை தயாரிப்பு நிறுவனம் பார்த்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்