2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (12:54 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
 
லைக்கா பெரும் பொருட்செலவில் தயாரித்துவரும் இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நாளைமுதல் பிற காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த மாத இறுதியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. 
 
நேற்று இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ட்வீட் செய்த லைக்கா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம், நவம்பர் 2016 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். 
 
ஆக, நவம்பரில் 2.0 படத்தில் ரஜினியின் கெட்டப் மற்றும் விவரங்கள் தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்