15 ஆண்டுகால பருத்திவீரன்: நடிகர் கார்த்தி டுவிட்

புதன், 23 பிப்ரவரி 2022 (11:32 IST)
கார்த்திக் பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆனதை அடுத்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் எனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் அவர்கள் வடிவமைத்தது. இந்த படத்திற்கு கிடைத்த எல்லா புகழும் அவருக்கே. அவருடன் பணிபுரிந்ததை நான் ஒரு பொக்கிஷமாக கருதுகிறேன்
 
இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச்சென்ற அமீர் அவர்களுக்கும் ஞானவேல், அண்ணா, எனது ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்