இந்த வார சினிமா.. நாளை ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ்!

vinoth

வியாழன், 3 ஜூலை 2025 (09:45 IST)
2025 ஆம் ஆண்டு பிறந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்து பாதியைக் கடந்துள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை இந்த முதல்பாதி கலவையான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் அஜித், கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களேக் கூட படுதோல்வி அடைந்துள்ளன.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்படாத டூரிஸ்ட் பேமிலி மற்றும் குடும்பஸ்தன் போன்ற படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் நாளை வெள்ளிக் கிழமை 10 படங்கள் ரிலீஸாகவுள்ளன. இதில் தமிழ் அல்லாத பிற மொழிப் படங்களின் டப்பிங் படங்களும் அடக்கம்.

நாளை வெளியாகும் படங்கள் : 3BHK, பறந்து போ, அக்கேனம்,  அனுக்கிரகன்,  குயிலி, ஃபீனிக்ஸ்,  ஜுராசிக் வேல்டு ரி பெர்த், தம்முடு, மெட்ரோ, ஜங்கர். ஆகிய படங்கள். இதுல் 3BHK மற்றும் பறந்து போ ஆகிய படங்களுக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்