பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போதும் கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது. இதைப்படமாக்க முயன்று எம்.ஜி.ஆர் இரண்டு முறைத் தோற்றுள்ளாஎ. அதன் பின் மணிரத்னம் சில முறை முயன்று பட்ஜெட் காரணமாக கிடப்பில் போட்டார்.
ஆனால், மணிரத்னத்திற்கு இம்முறை எல்லாம் கூடி வந்து படவேலைகளை மும்முரமாக ஆரம்பித்து ஸ்டோரி போர்டு வேலைகளில் இறங்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், அமிதாப் பச்சன், ஐஷ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தின் பட்ஜெட் பல மடங்கு உயர்ந்து வருவதால் திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் படத்தை முடிப்பதற்காக நடிகர்களிடம் மொத்தமாக 6 மாதங்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த 6 மாதமும் எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் மணிரத்னம் கேட்கும் போது கொடுக்க வேண்டுமாம். மணிரத்னத்திற்காக இந்த கண்டீஷனை அனைவரும் ஒத்துக்கொண்டாலிம் 6 மாதத்தில் 4 படங்களில் நடித்து முடிக்கும் விஜய் சேதுபதி சற்று யோசித்து பின்பு படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.