கேப்டன் மில்லர் இரண்டாம் பாகமும் இருக்கா?- வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சனி, 18 பிப்ரவரி 2023 (08:25 IST)
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தின் ரிலீஸுக்குப் பிறகு இரண்டாம் பாகம் சில மாத இடைவெளிக்குப் பிறகு தொடங்கப்படலாம் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்