T20 உலகக் கோப்பை: ஆட்ட நேரம் உள்ளிட்ட முழு விவரங்கள்
வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (16:58 IST)
ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் 3-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை இருபதுக்கு 20 போட்டிகள் துவங்குகின்றன.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இது 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களுக்கு வரும் அணிகள் மீண்டும் பிரிவு ஈ, பிரிவு எஃப் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
இந்த சூப்பர் 8 பிரிவில் அந்தந்தப் பிரிவுகளில் உள்ள அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடும். ஆனால் முதல் பிரிவு ஆட்டங்களில் பெற்ற புள்ளிகள் சூப்பர் 8 பிரிவுகளில் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.. சூப்பர் 8 பிரிவு தனி புள்ளிகளைக் கொண்டது.
இந்த சூப்பர் 8 முடிவில் பிரிவு ஈ, பிரிவு எஃப் ஆகியவற்றில் முதல் இரண்டு இடங்களில் வரும் 4 அணிகள் அரையிறுதியில் மோதும்.
அதாவது பிரிவு ஈ-யில் முதலிடம் பிடிக்கும் அணி பிரிவு எஃப்-இல் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் ஒரு அரையிறுதியிலும், பிரிவு எஃப்-இல் முதலிடம் பிடிக்கும் அணி பிரிவு ஈ-யில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் இரண்டாவது அரையிறுதியிலும் மோதும்.
பிறகு இறுதிப் போட்டி.
பிரிவு விவரங்கள்:
பிரிவு ஏ : பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்ட்ரேலியா
பிரிவு பி: இலங்கை, நியூஸீலாந்து, ஜிம்பாப்வே.
பிரிவு சி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான்
பிரிவு டி : மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அயர்லாந்து.
சூப்பர் 8 பிரிவு விவரம்:
இதில் அந்தந்தப் பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி1 டி2 என்று பிரிக்கப்படும்.
பிரிவு "இ" அணிகள்: ஏ1, பி2, சி1, டி2
பிரிவு "எஃப்" அணிகள்: பி1, ஏ2, சி2, டி1
போட்டி அட்டவணை, மைதானம், ஆட்டம் நடைபெறும் இந்திய நேரம்:
ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, பிரிவு பி - இலங்கை/நியூசீலாந்து, கயானா, இரவு 10.30 மணி.
ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, பிரிவு டி - மே.இ.தீவுகள்/அயர்லாந்து, கயனா, பகல்/இரவு : இந்திய நேரம் : நள்ளிரவு 2.30 மணி.
மே 1. சனிக்கிழமை, பிரிவு சி - இந்தியா/ஆப்கானிஸ்தான், செயின்ட் லூசியா, இரவு 7.00 மணி
மே 1. சனிக்கிழமை, பிரிவு ஏ - வங்கதேசம்/பாகிஸ்தான், லூசியா, இரவு 11.00 மணி
மே 2. ஞாயிற்றுக் கிழமை, பிரிவு சி - இந்தியா/தென் ஆப்பிரிக்கா, லூசியா, இரவு 7.00 மணி.
மே 2. ஞாயிற்றுக் கிழமை, பிரிவு ஏ - ஆஸ்ட்ரேலியா/பாகிஸ்தான், லூசியா, இரவு 11.00 மணி.
மே 3. திங்கள், பிரிவு பி - இலங்கை/ஜிம்பாப்வே, கயானா, இரவு 7.00 மணி.
மே. 3. திங்கள், பிரிவு டி - மே.இ.தீவுகள்/இங்கிலாந்து, கயானா, இரவு 11.00 மணி.
மே 4. செவ்வாய், பிரிவு பி - நியூசீலாந்து/ஜிம்பாப்வே, கயானா, இரவு 7.00 மணி
மே 4. செவ்வாய், பிரிவு டி - இங்கிலாந்து/அயர்லாந்து, கயானா, இரவு 11.00 மணி.
மே 5. புதன், பிரிவு ஏ - ஆஸ்ட்ரேலியா/வங்கதேசம், பார்படாஸ், 7.00 மணி.
மே 5. புதன், பிரிவு சி - ஆப்கானிஸ்தான்/தென் ஆப்பிரிக்கா, பார்படாஸ், இரவு 11.00 மணி
சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள்:
மே 6. வியாழன், பார்படாஸ், ஏ1 / டி2, இரவு 7.00 மணி
மே 6. வியாழன், பார்படாஸ், சி1 / பி 2, இரவு 11.00 மணி
மே 7. வெள்ளி, பார்படாஸ், ஏ2 / சி2 , இரவு 7.00 மணி
மே 7. வெள்ளி, பார்படாஸ், பி1 / டி1, இரவு 11.00 மணி
மே 8. சனிக்கிழமை, பார்படாஸ், ஏ1 / பி2, இரவு 7.00 மணி
மே.8. சனிக்கிழமை, பார்படாஸ், டி2 / சி1, இரவு 11.00 மணி
மே 9. ஞாயிற்றுகிழமை, பார்படாஸ், சி2 / டி1, இரவு 7.00 மணி
மே 9. ஞாயிற்றுக்கிழமை, பார்படோஸ், பி1 / ஏ2, இரவு 11.00 மணி
மே 10. திங்கள் கிழமை, செயின்ட் லூசியா, ஏ1 / சி1, இரவு 7.00 மணி
மே 10. திங்கள் கிழமை, செயின்ட் லூசியா, பி2 / டி2, இரவு 11.00 மணி
மே 11. செவ்வாய்கிழமை, செயின்ட் லூசியா, பி1 / சி2, இரவு 10.30 மணி
மே 11. செவ்வாய்க்கிழமை, செயின்ட் லூசியா, பகலிரவு ஆட்டம், டி1 / ஏ2, இரவு 2.30 மணி.
மே 13. வியாழக் கிழமை, முதல் அரையிறுதி, செயின்ட் லூசியா, இரவு 9.00 மணி.
மே 14. வெள்ளிக்கிழமை, இரண்டாவது அரையிறுதி, செயின்ட் லூசியா, இரவு 9.00 மணி
மே 16. ஞாயிற்றுக்கிழமை, கென்சிங்டன் ஓவல், பார்படாஸ், இறுதிப் போட்டி இரவு 9.00 மணி.