ஜிம்பாப்வேயை ‌வீ‌ழ்‌த்‌தி சூப்பர் 8‌க்கு செ‌ன்றது நியூ‌ஸீலாந்து

புதன், 5 மே 2010 (10:05 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெடபோ‌ட்டி‌யி‌‌லஜிம்பாப்வேயை வீழ்த்தி நியூ‌ஸீலாந்து அணி சூப்பர்-8 சுற்று‌க்கசெ‌ன்றது. ஜிம்பாப்வே அணி ஏற்கனவே இலங்கையிடமும் தோற்று இருந்ததால், முதல் அணியாக போட்டியை விட்டு வெளியேறியது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று கயானாவில் நடந்த 'பி' பிரிவு கடைசி லீக்கில் நியூ‌‌‌‌ஸீலாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. பூவா தலையா வெ‌ன்ற ‌நியூ‌ஸீலாந்து முதலில் ஜிம்பாப்வேயை பேட் செய்ய பணித்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணி முதல் 7 ஓவர்கள் வரை நன்றாக ஆடியது. ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் (6.3 ஓவர்) எடுத்திருந்தது.

இதன் பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தன. சுழற்பந்து வீச்சாளர் நாதன் மெக்கல்லம் ஒரே ஓவரில் சிகும்புரா (3), கவன்ட்ரி (0), எர்வின் (1) ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர். இதே போல் மிதவேகப்பந்து வீச்சாளர் ஸ்டைரிஸ் ஒரே ஓவரில் தனது பங்குக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முடிவில் ஜிம்பாப்வே அணி 15.1 ஓவர்களில் 84 ரன்னில் சுருண்டது. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் தைபு 21 ரன்களும், மசகட்ஸா 20 ரன்களும் எடுத்தனர். ‌நியூ‌‌ஸீலாந்து தரப்பில் நாதன் மெக்கல்லம், ஸ்டைரிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், வெட்டோரி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய நியூ‌ஸீலாந்து அணி 8.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பிறகு நியூ‌ஸீலாந்து அணிக்கு 10 ஓவர்களில் 40 ரன்கள் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் அவுட் பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை.

இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 8.1 ஓவர்களில் நியூ‌ஸீலாந்துக்கு 29 ரன்களே போதுமானதாக இருந்தது. எனவே 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூ‌‌‌ஸீலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூ‌ஸீலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நியூ‌‌ஸீலாந்துக்கு இது 2வது வெற்றியாகும். ஏற்கனவே இலங்கையையும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

ஜிம்பாப்வே அணி ஏற்கனவே இலங்கையிடமும் தோற்று இருந்ததால், முதல் அணியாக போட்டியை விட்டு வெளியேறியது. பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்‌ட்ரேலியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியதால் ஜிம்பாப்வே அணி மீது பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் பிரதான போட்டிகளில் சாதாரண அணி என்பதை காண்பித்து விட்டது. ஜிம்பாப்வே வெளியேறியதன் மூலம், இப் பிரிவில் ஒரு வெற்றி பெற்ற இலங்கை அணியும் சூப்பர்8 சுற்றுக்குள் நுழைந்து விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்