இந்திய அணியின் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்ட ரோஹித் ஷர்மா, தனது ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு யுவ்ராஜ் சிங் கற்றுக் கொடுத்த சில நுணுக்கங்களே காரணம் என்று கூறியுள்ளார்.
அணியிலிருந்து நான் நீக்கப்பட்டபோது யுவ்ராஜ் சிங்தான் என்னை சமாதானம் செய்தார். இந்தக் காலக்கட்டம் மன உளைச்சலைக் கொடுத்தாலும் இதனை மகிழ்ச்சியாகக் கழிக்கவேண்டும் என்று எனக்கு யுவ்ராஜ் புத்திமதி கூறினார். எனது பேட்டிங்கிற்கு பின்னல் இருக்கும் உண்மையான சக்தி யுவ்ராஜ் சிங்தான்." என்று உணர்ச்சிவயப்பட்டுள்ளர் ரோஹித் ஷர்மா.
நான் சைமன்ட்ஸ், லீ மேன் ஆகியோரிடம் உதவி பெற்றேன், ஆனால் எனது பெரும்பான்மையான ஆட்ட நுணுக்கங்களுக்குப் பின்னால் இருப்பவர் யுவ்ராஜ் சிங்தான். அதாவது ஒரு போட்டியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் கடைசி தருணங்களில் எதிரணி கேப்டன் எப்படி யோசிப்பார் என்பதை பேட்டிங்கில் இருக்கும் நாம் யோசிக்கவேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார் யுவ்ராஜ் சிங். என்றார் ரோஹித்.
அதே போல் சச்சின் டெண்டுல்கரின் அறிவுரைகளும் தன்னை உருவாக்கியுள்ளது என்று கூறிய ரோஹித், சச்சின் எப்போதும் ஆடும்போது உடல் எந்த நிலையில் இருக்கவேண்டும் என்பதில் கவனம் இருக்க வேண்டும் என்று கூறுவார். குறிப்பாக தலை நேராக நிமிர்ந்து ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டும் என்று கூறுவார் சச்சின். ஏனெனில் தலை நிலையாக இருந்தால்தான் பந்து மட்டையில் சரியான இடத்தில் படும் என்பார் சச்சின் இதுவும் எனக்கு பெரிதும் உதவியது என்றார் ரோகித் ஷர்மா.
கடந்த 20-ந்தேதி அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். நான் தேர்வானது எனக்கு முதலில் தெரியாது. அப்போது ஐ.பி.எல். போட்டியில் கவனம் செலுத்தி வந்தேன். அணி வீரர்களுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது நிருபர் ஒருவர் தொடர்பு கொண்டு நான் தேர்வு செய்யப்பட்டதை தெரிவித்தார். இது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
2007-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது போல மீண்டும் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினார் ரோகித் ஷர்மா.