ஐபில் 2022-ல் கமெண்ட்ரி செய்யப் போகிறாரா ரெய்னா?

புதன், 16 மார்ச் 2022 (10:56 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் எந்த ஒரு அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.

ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.     அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட்(unsold ) பட்டியலில் வைக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஏலத்தில் இருந்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா பெயர் இடம்பெறாததால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உண்டானது.

இந்நிலையில் அவர் குஜராத் அணியால் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்று வீரராக களமிறக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதையடுத்து இப்போது அவர் ஐபிஎல் 2022 ல் வர்ணனையாளராக பங்கேற்கப் போவதாக சொல்லப்படுகிறது. அவருடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்