சென்னையில் இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. டாஸ் வென்றது ஆப்கானிஸ்தான்..!

புதன், 18 அக்டோபர் 2023 (14:29 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் வந்து பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்றுமுன் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியை பொருத்தவரை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.  ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இங்கிலாந்து அணியை வென்ற ஆப்கானிஸ்தான் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்