தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து.. 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

புதன், 18 அக்டோபர் 2023 (07:38 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அன்று அணி வென்று அதிர்ச்சி கொடுத்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.  
 
நேற்றைய போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி அபாரமாக விளையாடி 43 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 246 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
இதனை அடுத்து நெதர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளதால் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.  சிறிய அணிகள் என்று கருதப்படும்  ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்