உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்: ரசிகர்கள் உற்சாகம்

வெள்ளி, 13 ஜனவரி 2023 (08:01 IST)
உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று இந்தியாவில் தொடங்க உள்ளதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கப்படுகிறது. தொடக்க விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
 
உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் மட்டும் 16 அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் ஜனவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெயின் நாட்டை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1975 ஆம் ஆண்டுக்கு பின் இந்தியா உலகக் கோப்பையை இதுவரை வெல்லவில்லை என்பதால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஆக்கிப்போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்