இந்த நிலையில் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் ரபாடா இணைந்துள்ளார், அவருக்கு பதிலாக அணியில் இருந்து சம்ஸி நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் நியூசிலாந்து அணியில் ஃபெர்குசன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக டிம் செளத்தி அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளிலும் வேறு எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிலையில் சற்றுமுன் வரை தென் ஆப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுவிட்டால் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது