மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி..!

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (08:02 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி..!
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 
 
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின., இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து மகளிர் அணி 105 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 106 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 14.2 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில்  தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி  விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 67 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து தென்ஆப்பிரிக்கா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்