5வது போட்டியிலும் தோல்வி.. பெண்கள் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பரிதாப நிலை..!

செவ்வாய், 14 மார்ச் 2023 (08:27 IST)
கடந்த சில நாட்களாக பெண்கள் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் ஏற்கனவே நான்கு போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து நிலையில் நேற்றைய போட்டியிலும் தோல்வி அடைந்து ஐந்தாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. 
 
நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து பெங்களூர் அணி  இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் இன்னும் இடம் பெறாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளதை  அடுத்து 8 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில்  இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது மற்றும்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்