இந்தியாவின் 73 ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக 14 வயது சிறுவன்!

திங்கள், 10 ஜனவரி 2022 (10:46 IST)
இத்தாலியில் நடந்து வரும் வெர்கானி கோப்பை ஒபனில் 14 வயது சிறுவன் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.

இத்தாலியில் நடந்த வெர்கானி கோப்பை செஸ் போட்டித் தொடரில் கலந்துகொண்ட 14 வயது பரத்சுப்ரமணியன் என்ற சிறுவன் இந்தியாவின் 73 ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவாகியுள்ளார். கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான 2500 புள்ளிகள் மற்றும் மூன்றாவது கிராண்ட்மாஸ்டர் நெறி ஆகியவற்றைப் பெற்றதை அடுத்து இந்தியாவின் அடுத்த கிராண்ட்மாஸ்டராகியுள்ளார். அவருக்கு இந்திய செஸ் கூட்டமைப்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்