ஏற்கனவே லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், இந்திய அணி வீராங்கனைகள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எல்லா துறைகளிலும் அசத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அரையிறுதி போட்டி நடக்கவுள்ள டெர்பி மைதானத்தில், அதிக லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அதனால் போதிய அனுபவம் உள்ளது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது கஷ்டம் தான். ஆனாலும் தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி விதிவிலக்கு அல்ல.’ என்று கூறினார்