இதனை அடுத்து புதிய ஸ்பான்சர்ஷிப் பெற முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல் கட்டமாக ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் என்ற நிறுவனம் ரூபாய் 300 கோடி வரை கொடுத்து ஸ்பான்ஸர்ஷிப் பெற முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராக இருந்து வருவதால் இந்த நிறுவனத்திற்கு ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி கொக்கோ கோலா, ஜியோ, அமேசான் உள்பட முன்னணி நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர்ஷிப்புக்காக போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் நிர்வாகிகள் எந்த நிறுவனத்தை தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது