இந்தியா-நியூசிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

செவ்வாய், 9 ஜூலை 2019 (08:15 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து நாட்டின் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும் என்பதை தற்போது பார்ப்போம்
 
இந்தியா, நியூசிலாந்து இடையேயான இன்றைய அரையிறுதி போட்டி மழையால் ஒருபந்து கூட வீசப்படாமல் முற்றிலும் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே' முறை கடைபிடிக்கப்படும். அதாவது போட்டி நாளை நடைபெறும். நாளையும் மழை வந்து போட்டி பாதிக்கப்பட்டால் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை போட்டியின் இடையில் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் வழக்கம்போல் டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி வெற்றி பெறும் அணி எது என்பது முடிவு செய்யப்படும். 
 
மேலும் இன்றைய வானிலை அறிக்கையின்படி போட்டியின் இடையிடையே மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் போட்டி முற்றிலும் பாதிக்கப்படும் வகையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்