உலக கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி ’புதிய உலக சாதனை’!

ஞாயிறு, 16 ஜூன் 2019 (18:17 IST)
உலகில் எந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் போல அவ்வளவு விறுவிறுப்பு இருக்காது என்று எல்லோரும் சொல்வர்.  அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டரில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தற்போது கேப்டன் விரார்ட் கோலி 11000 ரன்களை மிககுறைந்த போட்டிகளில் அடித்தவர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். 
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இப்போட்டியைக் காண  உலகமே இன்று ஆவலுடன் தொலைகாட்சியின் முன்பாக குவிந்துள்ளது.
 
இந்நிலையில் விராட் கோலி தற்போது  222 போட்டிகளில் 11, 000 ரன்களை கடந்து கிரிகெட்டில் புதிய உலக சதனை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய இபோட்டியில் 57 ரன்களை கடந்து 11, 000 ரன்களை நிறைவு செய்தார் கோலி. 
 
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 276 போட்டிகளில் 11000 ரன்கள் எடுத்ததே இதுவரை உலக சதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது விராட்கோலி 71 ரன்க்ளுடனும், விஜய் ஷங்கர் 3 ரன்களுடனும் களத்தில் ஆடி ஆடிவருகின்றனர்.

இதுவரை 46. 4 ஓவர்களில் 4விக்கெட்  இழப்பிற்கு இந்திய அணி 303 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்