என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: விராட் கோலி

செவ்வாய், 11 ஜனவரி 2022 (09:16 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலியின் ஆட்டம் குறித்து கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என காட்டமாக விராட் கோலி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக நடந்த கிரிக்கெட் தொடரில் விராட் கோலியின் ஆட்டம் மோசமாகி உள்ளாகி வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் எனது ஆட்டம் குறித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் எனது திறமை குறித்து பலரும் விமர்சிப்பது இது முதல்முறை அல்ல என்றும் எனக்கென்று சில தகுதிகளை வைத்துள்ளேன் என்றும் எனக்கு எது சிறந்ததோ அதைச் செய்வதில்தான் பெருமைப்படுகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார் 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்