டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரர்: 10 விக்கெட்டை வீழ்த்திய அஜாஸ் படேல்

திங்கள், 10 ஜனவரி 2022 (18:07 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை தேர்வு செய்துள்ளது.

 
கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்பிளே ஆகியோருக்குப் பிறகு உலகின் மூன்றாவது சிறந்த பந்து வீச்சாளர் ஆக அஜாஸ் படேல் திகழ்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்