டி20 உலகக்கோப்பை: கேப்டனாக இன்றே கோலியின் கடைசி போட்டி!!
திங்கள், 8 நவம்பர் 2021 (11:03 IST)
இந்த உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார்.
இந்திய அணியின் அரையிறுதி கனவு நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவோடு முடிந்து போனது. நேற்றைய வெற்றியின் மூலம் நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இது 4 வது முறையாகும். இதற்கு முன் 2009, 2010, 2012 ஆகிய சீசன்களிலும் இந்தியா இதேபோல் அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியிருக்கிறது.
இந்நிலையில் இன்று இந்திய அணி சம்பிரதாய ஆட்டத்தில் நமிபியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் வெற்றி தோல்வி எந்தவிதத்திலும் முடிவுகளைப் பாதிக்கப் போவதில்லை என்பதால் பெரிய எதிர்பார்ப்பில்லாத போட்டியாக நடக்க உள்ளது.
மேலும் இந்த உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதனால் அவர் 20 ஓவர் அணியின் கேப்டனாக விளையாடப்போகும் கடைசி போட்டி இதுவாகும்.