விராத் கோஹ்லி அபார செஞ்சுரி.. ராஜஸ்தானுக்கு கொடுத்த இலக்கு இதுதான்..!

Siva

சனி, 6 ஏப்ரல் 2024 (21:11 IST)
ஐபிஎல் போட்டியில் இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 
 
பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராத் கோலி மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதும் கேப்டன் டூபிளஸ்சிஸ் 44 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 184 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது 
 
பந்துவீச்சை பொறுத்த வரை ராஜஸ்தான் அணியின் சாஹல் 2 விக்கெட்டுக்களையும் பர்கர் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இன்றைய போட்டியில் பெங்களூரு கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பதால் அந்த அணி பந்துவீச்சில் அசத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்