முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்: உனத்கட் சாதனை

செவ்வாய், 3 ஜனவரி 2023 (19:05 IST)
முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்: உனத்கட் சாதனை
பிரபல பந்துவீச்சாளர் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை செய்துள்ளார்.
 
18 ஆண்டுகால ரஞ்சித் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இதுவரை முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததாக சரித்திரம் இல்லை
 
ஆனால் இன்று நடைபெற்ற ரஞ்சித் போட்டியில் முதல் ஓவரிலேயே பந்து வீச்சாளர் உனத்கட்  ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை செய்துள்ளார்
 
சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடி வரும் அவர் வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி சாதனை செய்துள்ளார். மேலும் அவர் வீசிய 12 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
உனத்கட்  செய்த சாதனையை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்