டி20 உலகக்கோப்பை - பாக். கிரிக்கெட் அணி அறிவிப்பு!

சனி, 23 அக்டோபர் 2021 (15:31 IST)
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நாளை விளையாட உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
ஒமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து 12 அணிகள் பங்கேற்கும் Super-12 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
 
முதல் போட்டியாக இன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதனைத்தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. நாளை இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறது. 
 
இதனிடையே டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நாளை விளையாட உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள விரர்களின் விவரம் பின்வருமாறு... பாபர், ரிஷ்வான், ஃபகார், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷஹீன், ஹாரிஸ், ஹைதர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்