இந்த அரைசதத்துடன் சூர்யகுமார், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் 25 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுத்த ஒரே ஆட்டகாரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் தெம்பா பவூமா என்பவர்13 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 25 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுத்திருந்தார். மேலும் ஐபிஎலில், கடந்த சீசனில் ராபின் உதப்பா 10 தொடர்ச்சியான 25+ ரன்கள் எடுத்திருந்தார்.